முஸ்னது அஹ்மத்

தமிழாக்கம் – பாகம் ஆறு

Original price was: ₹700.00.Current price is: ₹665.00.Add to cart

ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன்

நூல் அறிமுகம்

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் ‘முஸ்னது அஹ்மத்’ எனும் நபிமொழிப் பெருந்தொகுப்பு, அரபி மொழியில் 12 பாகங்களில் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில், 14 அத்தியாயங்களும் 1306 பாடங்களும் 26,363 நபிமொழிகளும் இடம்பெறுகின்றன.

மேலும் இப்பெருநூல், இதர நபிமொழித் தொகுப்பிலிருந்து வேறுபட்டு, நபிமொழிகளின் அறிவிப்பாளர்களான நபித்தோழர்களின் பெயர் வரிசைப்படி அத்தியாயங்கள் அமைக்கப்பட்டு, ஒரு ஸஹாபி அறிவித்த நபிமொழிகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புதுமையாகத் தொகுக்கப்பெற்றுள்ளது. ஏறத்தாழ ஆயிரம் நபித்தோழர்கள் அறிவிக்கும் நபிமொழிகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.

இமாம் அவர்களே தமது நூல்குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “ஏழரை லட்சம் நபிமொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 26,363 ஹதீஸ்களை மட்டுமே இத்தொகுப்பில் நான் திரட்டியுள்ளேன். ஒரு நபிமொழி விஷயத்தில் முஸ்லிம்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அவர்கள் இந்நூலை அணுகட்டும்! அவர்கள் தேடியது இதில் கிடைத்தால் சரி! இல்லையேல், அவர்கள் தேடியது ஆதாரபூர்வமானது அல்ல என்று அர்த்தம்.”

இமாம் அவர்கள், தம் புதல்வர் அப்துல்லாஹ் பின் அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் கூறியதாவது: “இந்த நூலை நன்கு பாதுகாத்துக்கொள்! விரைவில் இது, மக்களுக்கு முன்னோடியாக விளங்கும்.”

தமிழில் சராசரியாக ஒரு பாகத்தில் 800-1000 நபிமொழிகளின் அரபி மூலம், தமிழாக்கம், அடிக்குறிப்பு ஆகியவற்றுடன் வெளியிடப்பட்டுவருகிறது. இதுவரை ஆறு பாகங்களில் 6187 நபிமொழிகளின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது.

முஸ்னது அஹ்மத் தொகுப்புகள்

தொகுப்பாசிரியர் அறிமுகம்

இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் பரம்பரையில் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் பின் ஹிலால் பின் அசத் (ரஹ்) அவர்கள், ஹி: 164 (கி.பி. 780)இல் துர்க்மானிஸ்தானில் உள்ள ‘மர்வ்’ எனும் ஊரில் பிறந்தார்கள். பின்னர் தாயாருடன் இராக் தலைநகர் பஃக்தாதில் குடியேறினார்கள். அன்னார் ஓர் அநாதை. குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்துவிட்டார்கள்.

தொடக்கக் கல்வியை பஃக்தாதில் தொடங்கி, திருக்குர்ஆனை மனனம் செய்த இமாம் அவர்கள், நபிமொழிகள் சிலவற்றை இமாம் அபூயூசுஃப், ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) ஆகியோரிடம் கற்றார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பஸ்ரா, கூஃபா, திருமக்கா, யமன், எகிப்து, அர்ரய்யு முதலான நகரங்கள் சென்று அங்கிருந்த பெரும் அறிஞர்களிடம் கல்வி கற்றார்கள்.

இவ்வகையில் அரபி மொழி, நபிமொழி, அறிவிப்பாளர் தர ஆய்வியல், அறிவிப்புகளில் உள்ள மறைவான குறைகள், ஷரீஆ சட்டவியல், இறையியல்… எனப் பல்துறைகளையும் கற்றுப் பல்கலை அறிஞராக விளங்கினார்கள். அன்னாருடைய ஆசிரியர்களில் சுஃப்யான் பின் உயைனா, யஹ்யா பின் சயீத் அல்கத்தான், இமாம் ஷாஃபிஈ, யஸீத் பின் ஹாரூன், வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்) முதலானோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இமாம் அபூஹனீஃபா (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் ஆசிரியரின் ஆசிரியர்கள் ஆவர்.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடமிருந்து நபிமொழிகளை அறிவித்தோரில் பழம்பெரும் அறிஞர்கள் அடங்குவர். ஆதாரபூர்வமான ஆறு நபிமொழித் தொகுப்பாசிரியர்களில், இமாம் புகாரீ (ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்), இமாம் அபூதாவூத் (ரஹ்) ஆகியோர் அன்னாரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்த நேரடி மாணவர்கள் ஆவர். மற்ற மூவரான இமாம் திர்மிதீ (ரஹ்), இமாம் நஸயீ (ரஹ்), இமாம் இப்னுமாஜா (ரஹ்) ஆகியோர் அன்னாரின் மாணவரின் மாணவர்கள் ஆவர். இஃதன்றி ஹதீஸ் பகுப்பாய்வுக் கலை வல்லுனர் இமாம் யஹ்யா பின் மயீன் (ரஹ்) அவர்களும் அன்னாரின் பிரதான மாணவர்களில் ஒருவர் ஆவார்.

இறை வழிபாடு, நபிவழி நடத்தல், பற்றற்ற வாழ்க்கை, கொள்கைப் பிடிப்பு, அறச் சீற்றம், கடின உழைப்பு எனத் தம் வாழ்வையே தவ வாழ்வாகக் கழித்தவர் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள்.
கடுமையான வறுமையிலும் தன்மானத்தோடும் கௌரவத்தோடும் வாழ்ந்து வழிகாட்டிய இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 241 (கி.பி. 855)இல் பஃக்தாதில் தமது 75ஆவது வயதில் மறைந்தார்கள்.

முஸ்னது அஹ்மத் அனைத்து தொகுதிகள்

Original price was: ₹4,200.00.Current price is: ₹3,780.00.Add to cart

மொழிபெயர்ப்பு செயல்முறை

திருக்குர்ஆன் விளக்கவுரை (தஃப்சீர்), நபிமொழி தொகுப்புகள் முதலான இஸ்லாமியத் தரவுகளின் மொழிபெயர்ப்புத் துறையில் கடந்த 27 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பேராசிரியர் அ. முஹம்மது கான் பாகவி அவர்கள் தலைமையிலான நால்வர் கொண்ட குழுவே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இவர் தலைமையில் இதுவரை பல்வேறு தொகுப்புகளின் தமிழாக்கம் 27 பாகங்கள் வெளிவந்துள்ளன.

குழு

திருக்குர்ஆன் விளக்கவுரை (தஃப்சீர்), நபிமொழி தொகுப்புகள் முதலான இஸ்லாமியத் தரவுகளின்…

வரவிருக்கும் வெளியீடு…

முஸ்னது அஹ்மத் தமிழாக்கம்,
7ஆம் பாகம்

Shopping Cart
Scroll to Top