since 2019
ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன்
கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் இஸ்லாமிய அறிஞரும் நபிமொழி தொகுப்பாசிரியருமான இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் தொகுத்த உலகப் பிரசித்திபெற்ற மாபெரும் நபிமொழித் திரட்டான ‘முஸ்னது அஹ்மத்’ எனும் நூலைச் செம்மொழியாம் தமிழ் மொழியில் வெளியிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இஸ்லாமிய நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்க, 2018 ஆம் ஆண்டு ஜூலை மாத முதல் மொழிபெயர்ப்புக் குழு அறிஞர்கள் மற்றும் சமுதாய ஆர்வலர்கள் இணைந்து நடத்திய பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின் 05.05.2019 அன்று அதன் அறிமுக விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் சமூக மற்றும் சமய ஆர்வலர்களான சமுதாயப் பிரமுகர்கள் ஐவரை இயக்குனர்களாகக் கொண்டு, “ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன்” எனும் நிறுவனம் நிறுவப்பட்டு, இலாப நோக்கமற்ற (Not for Profit) அமைப்பாக முறைப்படி பதிவு செய்யப்பட்டது. இறையருளால் இந்நிறுவனம் 01.07.2019 முதல் சென்னை மாநகரில் இயங்கிவருகிறது.